பக்கம்:பாட்டும் கதையும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ன்னம் போல நடைபோடு
டி ஓடி விளையாடு
ன்னும் என்ன கண்மணியே
டில் லாத பொன்மணியே
ன்னைப் போல நல்லவரார் ?
ரில் உன்போல் வல்லவரார்?
ன்னை விட்டுப் பிரியாதே
ங்க வைத்துத் திரியாதே
ந்து விரலும் பூவிதழோ?
ஐயா உன்கை தாமரையோ?
ன்றுக் கொன்று மென்மையடா
டும் உன்றன் கால்களடா
ஒளவை உன்றன் பாட்டியடா
அழகாய் அ ஆ கற்றிட்டா.

29