இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோறு சமைப்பவள் அன்னை - என்னைச்
- சுமந்து வளர்ப்பவர் தந்தை
வாரி அணைப்பவள் அன்னை - தின்ன
- வாங்கித் தருபவர் தந்தை.
முத்தம் தருபவள் அன்னை - உச்சி
- மோந்து வளர்ப்பவள் அன்னை
கத்தும் குரலினைக் கேட்டால் - மெத்தக்
- கண்ணீர் விடுபவள் அன்னை.
பள்ளிக் கெனைக்கூட்டிச் சென்று -- நான்
- பாடம் படிப்பதற் கென்று
அள்ளிப் பல நூல்கள் தந்து - என்னை
- அன்புடன் காப்பவர் தந்தை.
அன்னையைப் போலொரு தெய்வம் - இந்த
- அகிலத்தில் வேறெது மில்லை
தந்தை சொல் போலொரு நீதி - இந்தத்
- தாரணி மீதினில் இல்லை.
- தாரணி மீதினில் இல்லை.
32