இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தண்டும் பெருங்கிளையும் - பச்சைத்
- தழையும் காய்கனியும்
கொண்ட மரத்தடியில் - ஒரு
- கோடரிக்கா ரன்வந்தான்
தீம்பு நினைப்புடையோன் - கொடுந்
- தீய கருத்துடையோன்
காம்பு செய்வதற்கே - ஒரு
- கட்டை வேண்டுமென்றான்.
ஓங்கி உயர்ந்தமரம் - அவன்
- உள்ளம் அறியாமல்
தாங்கி யிருந்தகிளை - ஒன்றைத்
- தந்தே உதவியது
கோடரிக் காம்புசெய்தான் - துளையில்
- கொண்டதை மாட்டிவிட்டான்
நீடிய அம்மரத்தை - வெட்டி
- நிலத்தில் சாய்த்துவிட்டான்
- நிலத்தில் சாய்த்துவிட்டான்
35