பக்கம்:பாட்டும் கதையும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிக்கு மாணவன் பாட்டுப்பாட வல்லவன் யாரெதிர்த்த போதிலும் போருடற்ற வல்லவன். மெத்தவும் படித்தவன் மீசை வைத்த பாண்டியன் முத்து முத்துப் பாடலால் முத்தமிழ் வளர் த்த்வன். செந்தமிழ்க்குக் காவலன் சீர்திருத்த நாவலன் சொந்தமென்று வந்த நம் சுப்புரத்ன பாவலன். 40