இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதியி னத்தால் அக்கழுதை மணலை நீரில் நனைத்ததனல் பொதியும் மிகவே கனத்ததடா புண்ணுய் முதுகும் போச்சுதடா. ஒருநாள் ஒருவரை ஏமாற்றி உலகில் ஒருவன் வாழ்ந்திடலாம் மறுநாள் மீண்டும் பிழைசெய்தால் மக்கள் நம்மை விடமாட்டார். குப்பன் என்ற ஓர் உப்பு வணிகன் இருந்தான். அவனிடத்தில் ஒரு குண்டுக் கழுதை இருந்தது. குப்பன் உப்புப் பொதி யைக் கழுதையின் மீது ஏற்றிச் செல்வது வழக்கம். வழியில் இருந்த நீரோடையில் கழுதை ஒருநாள் உப்புப் பொதியுடன் தவறி விழுந்து விட்டது. மூட்டையில் இருந்த உப்பு, நீரில் கரைந்து போய்விட்டது. இதல்ை மூட்டையின் கனம் குறைந்தது. பொதியின் கனம் குறைந்ததால் கழுதை மிகவும் மகிழ்ச்சி யடைந்தது. மீண்டும் ஒரு தடவை உப்புப் பொதி யுடன் வந்தபோது, கழுதை வேண்டுமென்றே நீரில் விழுந்தது. இப்போதும் உப்பின் 56