இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புல்லைத் தின்னும் ஆடு புள்ளி மயில்போல் ஆடு. நம்முயிர் அன்ருே நாடு? நல்லதை என்றும் நாடு. ஐந்தும் மூன்றும் எட்டு அப்பால் போபோ எட்டு. கையில் வெள்ளித் தட்டு கையை மெல்லத் தட்டு. தில்லையிலே தங்க ஓடு தீமையைக் கண்டால் ஒடு. நல்லவர்க் கேனிந்தப் பாடு ? நல்ல குரலில்நீ பாடு. உருளுது வானில் இடி உரலில் கொட்டி இடி. பருப்புப் பத்துப் படி பாட்டும் கதையும் படி, 64