இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செங்குன் றுாரில் முன்னுெருநாள் செல்வன் ஒருவன் வாழ்ந்துவந்தான் அங்கவ னுக்குப் பணிசெய்ய - ஆட்கள் பலபேர் இருந்தனரே. அந்தச் செல்வன் ஒருசமயம் அயலூர் செல்லப் புறப்பட்டான் சிந்தை மகிழப் பணியாட்கள் செல்வன் பின்னல் புறப்பட்டார். ஆட்கள் எல்லாம் விரைவாக ஆளுக் கொன்ருய் அங்கிருந்த மூட்டை தம்மைத் தாம்துக்கி முன்னுல் நடந்து சென்ருர்கள். 68