இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பயணம் மீண்டும் தொடங்கியது பணியா ளர்கள் சுமையோடு வெயிலின் கொடுமை தாங்காமல் வேதனை யோடு நடந்தார்கள். முத்தன் சென்ருன் கைவீசி மூட்டை தலையில் இல்லாமல் புத்தி சாலித் தனத்தாலே போகும் துன்பம் அடியோடு. செங்குன்றுாரில் ஒரு செல்வன் வாழ்ந்து வந்தான். அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். செல்வன் ஒருநாள் அயலூருக்குப் புறப்பட்டான். வேலைக்காரர் கூ ட் ட மு. ம் அவைேடு புறப்பட்டது. பயணப் பொருள்க ளெல்லாம் பல மூட்டைகளாகக் கட்டப் பட்டிருந்தன. வேலைக்காரர்கள் எல்லாரும் ஆளுக்கொரு மூட்டையாகத் தலையில் சுமந்து சென்றனர். அவர்களில் முத்தன் என்ருெரு வேலைக்காரன் இருந்தான். அவன் மிகவும் அறிவாளி. அங்கிருந்த மூட்டைகளில் பெரிய மூட்டையை அவன் சுமந்து வந்தான். மூச்சுத் திணற அம்மூட்டையை முத்தன் சுமந்து வருவதைக் கண்ட பணியாட்கள் அவனைக் கேலி செய்தனர். 70