இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பள்ளிச் சிறுவன் பரமசிவம் பாடப் புத்தகம் ஒன்றினையே கள்ளத் தனமாய்க் கவர்ந்துவந்தே காட்டிச் சென்ருன் தாயினிடம். தாயோ சிறிதும் வருந்தாமல் தட்டிக் கொடுத்தாள் தன்மகனை தீயோர் உறவால் பரமசிவம் திருடன் என்றே பேரெடுத்தான். பலபேர் வீட்டில் கன்னமிட்டான் பக்காத் திருடன் ஆகிவிட்டான் கொலையும் களவும் குடிசூதும் குற்றம் என்பதை மறந்துவிட்டான். 72