பக்கம்:பாட்டும் கதையும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையும் களவாய் ஒர்நாளில் காவல் வீரர் பிடித்துவிட்டார் மெய்யும் புண்ணுய் மாறிடவே மிலாறு கொண்டு வீசிவிட்டார். கையில் விலங்கை மாட்டிவிட்டார் கன்னத் தில்அடி தீட்டிவிட்டார்

  • ஐயோ! ஐயோ !” எனக்கதறி

அன்னை பின்னல் ஓடிவந்தாள். வீதியில் சென்ற பரமசிவம் விரைவாய்த் தாயை அருகழைத்துக் காதைக் கடித்தே எடுத்துவிட்டான் - கதறித் துடித்தாள் அவன்அன்னை. தாயின் காதைக் கடித்தவனைத் தடியால் தாக்க வந்தார்கள் * நீயும் மகளு?’ என்ருர்கள் நீசன் என்றே சொன்னர்கள். “பள்ளியில் ஓர் நாள் திருடிவந்தேன்! பாவம் என்றதைச் சொல்லாமல் அள்ளி அணைத்தாள் ; இக்காதால் ஆசையுட னதைக்கேட்டு நின்ருள். 73