இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'புண்ணின் கொடுமை அறியாமல் பூட்டி விட்டார் இம்மாட்டை! என்னே கொடுமை!’ என்றுசொல்லி இரக்கப் பட்டார் காந்திமகான். கழுத்துப் புண்ணுல் மிகவாடும் காளை மாட்டை அவிழ்த்துவிட்டே இழுத்து வந்தார் வண்டியினை என்ன கருணை கருணையடா..!! ஒரு நாள் காந்தியண்ணல் ஓர் இரட்டை மாட்டு வண்டியில் ஏறிப் பயண்ம் செய் கொண்டிருந்தார். வண்டியிழுத்த மாடுகளில் ஒன்று தள்ளாடி ந_ந்து வந்தது. அதன் கழுத்தில் புண் இருந்தது. அப்புண்ணி லிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாகக் கசிந்து கொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்ட காந்தி அண்ணல் உள்ளம் மிகவும் வருந்தினர். உடனே கழுத்துப் புண்ணுல் வருந்திய அம்மாட்டை அவிழ்த்து விட்டுவிட்டு வண்டியைத் தாமே இழுக்கத் தொடங்கினர்.