இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரவு நேரம். பசியால் வருந்திய ஓர் ஒநாய். ஏதாவது இரை கிடைக்குமா என்று தேடிக் கொண்டு ஒரு சிற்றுாரில் நுழைந்தது. அப்போது எதிரே ஒரு நாய் வந்தது. இரண்டும் நலம் விசாரித்துக் கொண்டன. நாய்: - வானில் நிலாவரும் வேளையிலே-இங்கு வட்ட மிடுகின்ருய் சாலையிலே கானில் உணவு கிடைக்காமல்-இங்குக் கைப்பற்ற வந்தாயோ கோழிகளை ? ஓநாய்: கானில் உணவு கிடைக்கவில்லை-அண்ணு கடும்பசி எனைவிட்டு நீங்கவில்லை மேனி மிகவும் இளைத்துவிட்டேன்-காடு மேடெல்லாம் ஓடிச் சலித்துவிட்டேன். 78