பக்கம்:பாட்டும் கதையும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாய் தன்னுடைய தலைவன் வீட்டுக்கு ஒநாயை அழைத்துக் கொண்டு புறப்பட்டது. நாயின் கழுத்தில் ஒரு தழும்பு இருப்பதைச் செல்லும் வழியில் ஓநாய் கண்டது; அதைப் பற்றி நாயிடம் கேட்டது. ஒநாய் : கழுத்தில் ஏதோ வடுவொன்றை-என் கண்க ளிரண்டால் காணுகின்றேன். கொழுத்த உன்றன் உடல்தனிலே-இக் குறையும் வந்தது ஏன் அண்ணு? நாய் : அழுந்துகின்ற பட்டையில்ை-என் அழகுத் தோளில் சிறிதாகத் தழும்பு வந்து சேர்ந்ததடா-இதில் தவறு சிறிதும் இல்லையடா. ஒநாய்: - அழுந்துகின்ற பட்டையினை-நீ அணிந்து கொள்வதும் ஏன் அண்ணு? தழும்பு வந்து சேராமல்-நீ தடுத்துக் கொள்ள லாகாதா ? நாய் : பகலில் என்னைச் சங்கிலியால்-அவர் பட்டை போட்டுக் கட்டுகிருர் இரவில் பட்டை தனை நீக்கி-என்னை எங்கும் திரிய விடுகின்ருர். 80