பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 99

மருதநிலத்தில் வாழும் மகளிர்தம் செல்வச் செழிப்பு, அவர்கள் இரவிலும் பகலிலும் தாங்கள் அணிந்திருக்கும் பசிய அணிகலன்களைக்கூடக் களையாமல் குரவைக் கூத்தினை விரும்பியயர்ந்தார்கள் என்ற செய்தியினை அரிசில்கிழார் குறிப்பிடுகின்றார்.

மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல் செய்யுள் காரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யாணர்க் குரவை அயரும்

-பதிற்றுப்பத்து 73: 4-7 துணங்கைக் கூத்து ஆடுமிடங்களில் சுரை நிறைய நெய் சொரிந்து பெரிய திரியிடப்பட்டு நெடுவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் என்ற செய்தியும்.தெரியவருகின்றது.

சுடரும் பாண்டில் திருகாறு விளக்கத்து முழா இமிழ் துணங்கை

-பதிற்றுப்பத்து 52; 13-14

சேர மன்னர்களும் சரி, சேர நாட்டு மறவர்களும் சரி அவர்கள் வீரத்திற்குப் பேர் போனவர்கள். சேரர்கள் கடற் போரில் வல்லவர்கள். செங்குட்டுவன் கடற்படை கொண்டு சென்று பகைவரைத் தாக்கி வெற்றி பெற்ற செய்தி பதிற்றுப்பத்துள் இடம் பெற்றுள்ளது. =

கோடுங்ரல் பெளவங் கலங்க வேலிட் டுடை திரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல் புகழ்க் குட்டுவன்

-பதிற்றுப்பத்து 46; 11-13

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியர் நெருங்கி வசிக்கும் பேரிசை இமயம் முதல் தென் திசைக்குமரி வரை பல போர்களை நிகழ்த்தி வென்று யானை மீதமர்ந்து