பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாட்டும் தொகையும்

5, 7, 9 முதலான ஒன்றில் தொடங்கி அடுத்தடுத்த ஒற்றைப்படை எண் பெற்ற பாடல்கள் பாலைத் திணை யாகவும், 2, 8, 12, 18 முதலான - இரண்டும் எட்டுமான எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 4, 14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாக வும், 6, 16 முதலான ஆறு தொடர்பான எண் பெற்றவை மருதத் திணையாகவும் 10, 20 எனப் பத்துகளாலாய எண் பெற்றவை நெய்தல் திணையாகவும் தொகுக்கப் பட்டுள்ளன. எனவே அகநாறுாற்றில் ஒரு பாட்டின் எண்ணைச் சொன்னால், உடனே அது இன்ன திணைக் குரிய பாடல் என்பதைச் சொல்லி விடலாம். இவ்வாறு பாட்டுகளைத் தேர்ந்தெண்ணித் தொகுத்த தொகுப்பாசிரி யரின் முயற்சி வியக்கவும் பாராட்டவும் தக்கதாகும்.

அகநாறுற்றின் நானுாறு பாடல்களும் அகவற் பாட்டுகளால் ஆனவையாகும்.

இந்நூலில் நயங்கண்டு தெளிய வேண்டிய பாடல்கள் பலவற்றைக் காணலாம். உள்ளுறை, இறைச்சி முதலிய குறிப்புப் பொருள்கள் நிறைந்து காணப்படுவது இந் நூலாகும். கோசர், காரி, கொடித் தேர்ச்செழியன், நன்னன், பண்ணன், பிட்டன், பாரி, தித்தன். கெழியன், அத்தி, கோசர், கங்கன், கட்டி, புல்லி முதலிய குறுநில மன்னர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாக இந்நூலில் உண்டு. மாமூலனார் தம் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வைத்தே பாடுகின்றார். பரணர் சங்க காலத்தில் வரலாற்றாசிரியரோ என்று எண்ணும் அளவிற்குத் தாம் இயற்றியுள்ள பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வடித்துத் தந்துள்ளார். அடுத்து, ஐவகை நிலங்களின் வருணனை அகநானுாற்றுப் பாடல்களில் காணும் அளவிற்கு விரிவாகவும் விளக்கமாகவும், அழகாக வும் அருமைப்பாடாகவும் வேறு எந் நூலினும் காண வியலாது. உவமைகள் மிகச் சிறந்து விளங்குகின்றன குட வோலை மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வேண்டியவர்