பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாட்டும் தொகையும்

வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயி றெள்ளுங் தோற்றத்து விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தானின் று.ாட்டி

-சிறுபாணற்றுப்படை : 238 - 245

என வரும் இப்பகுதியில், காண்டவ வனத்தை எரித்த அருச்சுனனைக் குறிப்பிட்டு, அவன் அண்ணன் வீமன் இயற்றிய மடை நூலிற்சொல்லியபடி உணவு வகைகள் சமைக்கப்பெற்று, இரந்து சென்ற பாணர்களுக்கு நல்லியக் கோடனால் முன்னின்று ஊட்டப்படுகின்றன என்ற குறிப்பு பாரதக்கதை இந்நூலில் இடம்பெற்றுள்ள நிலையை உணர்த்தும்.

நல்லியக்கோடானின் அருங்குணங்களும் அவற்றை ஏத்துவோரும் பின்வருமாறு சிறப்பிக்கப்படுகின்றனர் :

செய்ங்கன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும், செறிந்துவிளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த, அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும் ஆண் அணி புகுதலும் அழிபடை தாங்கலும் வாண் மீக் கூற்றத்து வயவர் ஏத்தக் கருதியது முடித்தலும் காமுறப் படுதலும் ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும் அரியேர் உண்கண் அரிவையர் ஏத்த அறிவுமடம்_படுதலும் அறிவுகன் குடைமையும் வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த

-சிறுபாணாற்றுப்படை : 207-215

எனவரும் இப்பகுதியில் இயற்கை வருணனை, உடல் வருணனை, காட்சி வருணனை, சொல்லாட்சி, உவமைத் திறன் ஆகிய அனைத்திலும் நல்லூர் நத்தத்தனார் திறம் மிகுந்தவராகக் காணப்படுகிறார். எனவே, சிறுபாணாற் றுப்படை, சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை’ என்று பாராட்டப்படுகின்றது.