பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மலைபடுகடாம்

மலைபடுகாடம் பத்துப்பாட்டில் இறுதிப்பாட்டாகும். இஃது ஆற்றுப்படை அமைதி அமைந்த ஒரு நூலாகும். எனவே, இது ‘கூத்தராற்றுப்படை’ எனவும் வழங்கும். இந்நூலின் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார் பெருங்கெளசிகனார் ஆவர். இரணியமுட்டம் என்பது பாண்டிய நாட்டில் உள்ள ஒரு சிறிய நிலப்பகுதியாகும்; மதுரையையடுத்த ஆனைமலைப்பகுதி அழகர் மலைப்பகுதி இவ்விரண்டையும் சூழவுள்ள பகுதியாகும். பெருங்கெளசி கனார் என இவர் வழங்கப்படுவதிலிருந்தே இவர்தம் தனிச்சிறப்பினை அறியலாம்,

583 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவால் ஆன நூல் இஃதாகும். பரிசில் பெறவரும் கூத்தனொருவனைப் பரிசில் பெற்றானொருவன் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனிடத்தே ஆற்றுப்படுத்தியதாகப் புலவர் பாடியுள்ள பாட்டு இது. மலைக்கு யானையை உவமித்து அதன் கட் பிறந்த ஒசையைக் கடாம் எனச் சிறப்பித்ததனால் இப் பாட்டு மலைபடுகடாம், எனப்பெயர் பெற்றது. கடா மென்பது ஆகுபெயராய் அதனாற் பிறந்த ஒசையை உணர்த்திற்று.

இன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள சவ்வாது மலைத்தொடரும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதியும் நன்னனது நாடாகும். மலையடிவாரத்