பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 8器 பற்றினவர்கட்கு மரணமான பின்பு வீடுபேறு கிடைக்கும் என்பதனை நன்கு அறிந்தவர் ஆழ்வார். தம் திருமேனி யின் முடிவு அணித்தென்று தாமே அறுதியிட்டுக் கொண்ட் ஆழ்வார், "திருமோகூர் கலங்கழல் அவனடி கிழல்தட மன்றி யாமே.”* (கழலவன்-திருவடி பொருந்தியிருக்கப்பெற்றவன்; அடி -திருவடி, தடம்-பொய்கை; என்றும், "திருமோகூர் ஆத்தன் தாமரை அடியன்றி மற்றிலம் அரனே' |ஆத்தன்-ஆப்தன், அரண்-பாதுகாப்பு.j என்றும் கூறியுள்ளதை நினைக்கின்றோம். நாமும் ஆழ்வார் பெற்ற அநுபவத்தைப் பெற முயல்கின்றோம். தீர்த்தம், திருத்துழாய் பெற்று, சடகோபம் சாதிக்கப் பெற்றுத் தாயார் சந்நிதி இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லுகின்றோம். அங்குச் சென்று அவள் அருளையும் பெறுகின்றோம். தாயாரின் திருநாமம் மோகனவல்லி, இவர் திருமோகூர் வல்லி நாச்சியார்', மேகவல்லி நாச்சியார்' என்ற திருநாமங்களாலும் வழங்கப் பெறுகின்றார். இங்கும் பிரசாதங்கள் பெற்றுக் கொடிமரத்தின் அருகில் வந்து, கூத்தன் கோவலன் குதற்றுவல் அசுரர்கள் கூற்றம் ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்," 39. திருவாய் 10.1:2 41. ഒു 10,1:6 40. ഒു 10, 1 : 6