பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் |மும்மதம் நின்று-மூன்று வகை மதங்களும் மிகுந்து; கொல்யானை - கொலைத்தொழிலையுடைய #ff6 డు; చు! யுடைய, அரசு-நளன்.; அன்னத்தைத் தூதுவிட்டு அது தமயந்தியிடமிருந்து எப்போது திரும்பி வரும் என்று எதிர்பார்த்திருக்கும் நளன் வாக்காக வெளிவந்தது இப்பாடல். இவ்விடத்தில் இத்தலத்து எம்பெருமானிடம் திகழும் திருக்குணத்தைப் பற்றிய ஆசாரிய ஹிருதயச் சூத்திரத்தை நினைக்கின்றோம். "மார்க்கபந்து சைத்யம் மோஹனத்தே மடுவிடும்' (மார்க்க பந்து - வழித்துணை; சைத்யம் - குளிர்ச்சி; மோஹனம்-மோகூர்.) திருமோகூரில் இறைவனுடைய 'தண்மை’ என்ற குணம் விளங்கும் என்கின்றார் இதில், காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதி’ (10.1:1); ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரண் (10.1:6) என்ப வற்றைத் திருவுள்ளம்பற்றி மார்க்கபந்து’ என்கிறார். 'அவனடி நிழல் தடம் (10.1:2), மரகத மணித் தடம் (10.1:8) என்ற பாசுரப் பகுதிகளைத் திரு உள்ளம் பற்றி சைத்யம்' என்றார். தேவர்கட்கு அமுதம் அளித்து சமயத்தில் அசுரர்களை மயங்கச் செய்த செயலுடன் இறைவன் சேவை சாதிக்கும் இடமாதலால் இத்தலத்தை மோஹனம்’ என்கிறார் தயரதன் பெற்ற மரகத மணித்தடம்’ (10.1:8) என்னும் திருப்பாசுரப் பகுதிக்குச் சேர மடுவிடும்’ என்கிறார். இந்த நுட்பங்களையும் சிந்திக்கின்றோம். இந்தத் திவ்விய தேசத்திற்கு இலக்கியச் சிறப்பும் உண்டு. பழைய சங்க இலக்கியங்களில் இவ்வூரைப் 50. ஆசா. ஹிரு. குத்-132.