பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ருஞ்சோலை' என்று பாராட்டப் பெறும் பொருத்தத்தைக் கண்டு இறும்பூது எய்துகின்றோம். திருமங்கையாழ்வார் இந்தச் சோலையைச் சினை வளர் பூம் பொழில்சூழ் திருமாலிருஞ்சோலை' 'தேன் அமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை’ தேன் அருவி கோழிக்கும் திருமாலிருஞ்சோலை', சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை திங்கள் மாமுகில் திருமாலிருஞ்சோலை' என் தறெல்லாம் வருணித் திருக்கும் பாசுரப் பகுதிகளில் ஆழங்கால்பட்டு ஆனந்தம் அடைகின்றோம். பாசுரங்களில் சோலையுடன் மலைச்சாரல்களையும் மலையையும் வருணிக்கும் பகுதிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. நம் மாழ்வாரும் இச்சோலையை வளர் இளம் பொழிழ் சூழ் மாலி ருஞ் சோலை', 'மதி தவழ் குடுமி மாலிருஞ் சோலை' 'மறு இல் வண் சுனை மாலிருஞ்சோலை: "மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை' மழக்களிற் றினம் சேர் மாலிருஞ்சோலை' மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலை," என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அதன் இயற்கையழகில் தம் உள்ளத்தைப் பறி கொடுத் துள்ளதைக் கண்டு வியப்பெய்துகின்றோம். சோலையின் சூழ்நிலை நம்மைத் திருமங்கையாழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் படத் தூண்டுகின்றது. சோலை மலைச் சாரலில் மூங்கில்கள் விண்டு விரிந்து வளர்ந் துள்ளன; நறுமணம் மிக்க குறிஞ்சி மலர்களிலுள்ள செவ்வித் தேனில் படிந்த வண்டுகள் இன்னொலியுடன் 6. பெரி திரு. 9.9:2 9. ഒു 9.9:4 T. ഒു. 9 9:5 :0. ഒു 9.9:4 8. ഒു 9.9.7 11.. ഒു. 2.10:1 12. 64 2.10:2 18. ഒു. 2, 10:5 14. ഒു. 2.10:8 15. திருவாய் 2.16:9 16. ഒു. 2.10:10