பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} |(} 0. பாண்டி நாட்டுத் திருப்பதிகள் கடவுளான பதினெட்டாம்படிக் கருப்பர் இருக்கின்றார். இவர் உருவிலி. சந்நிதி முன்பு யாரும் பொய் சொல்லத் துை இவர் முன்னர் சத்தியம் செய்வது எ ன் ஒய் மரபு இன் ஆந்து வருகின்றது. இவருடைய காவலில் தான் திருமாலி ருஞ்சோலை எம்பெருமான் இருந்து வருவதாகக் கோயில் நிர்வாகத்தின் ஏற்பாடு. நாள் தோறும் கோயிலில் உள்ள பண்டாரத்தைப் பூட்டித் திறவு கோலை இந்தப் பதினெட்டாம்படிக் கருப்பரிடம் கொண்டு வைப்பதும் மறுநாள் காலையில் பட்டர் முதல்நாள் வைத்த திறவு கோலை எடுத்துச் செல்வதுமான வழக்கம் ன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. மேலும், அழகர் மீனாட்சித் திருமணத்திற்காகப் புறப்படுங்கால் அவர் அணிந்துள்ள நகைகளின் பட்டியலை இக் காவல் தெய்வத்தினிடம் படித்துக் காட்டும் மரபும், அங்ஙனமே அவர் திரும்பும் போது அவர்முன் மீண்டும் பட்டியலைக் படித்துக் காட்டும் வழக்கமும் இன்றும் நடைமுறையிலிருப் பதை அறிகின்றோம். நம்முடைய பழக்க வழக்கங்களை யெல்லாம் எம்பெருமானுடைய பழக்க வழக்கங்களாகக் கருதுப் மரபினை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். மக்களைக் காக்கும் கடவுளுக்கும் ஒரு காவலாள். பெரியாழ்வாரின் மனப்பான்மை போன்ற ஒரு மனப்பான்மையேயன்றி வேறொன்றும் அல்ல. பதினெட்டாம் படி வாயிலுக்கு வட புறம் உள்ள மதிலின் ஒரு சுவர் திறந்திருக்கும். வண்டிவாயில் எனப் படும் அந்த வாயிலின் வழியாக நுழைந்துதான் கோயிலின் வெளிப்பிராகாரத்தை அடைய வேண்டும். கோயிலின் வட புறம் உள்ள வழியே மலைக்குச் செல்லும்வழியாகும். அந்த வழியாக மலையேறி இரண்டு மையில் சென்று நூபுர கங்கை என்னும் தீர்த்தத்தை அடைகின்றோம். இதன் உற்பத்தி நம் கண்ணுக்குப் புலனாவதில்லை. யானைத் துதிக்கைபோல் அமைந்திருக்கும் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்திற்கு வருவதுதான் நம் கண்ணில்