பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் 135 தாக. திருமங்கையாழ்வார் அழகரை சோலை மழ களிறே' என்றும், தென் ஆனாப்' (தெற்கு திருமலை வில் நிற்கின்ற யானையே) என்றும் விளித்தார். அப்படி பட்ட யானையின் அருகே மழகளிற்றினம் சேர்வது வியப்பன்று என்று காட்டியவாறு. 'பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்' 'ஒரு நாளாகிலும் பயன்படும் என்று கருதி இவ்வுலகங்களைப் படைத்த எம்பெருமான்' என்பது பொருள். எம்பெருமான் இவ்வுலகைப் படைப்பதாவது இறகொடிந்த பறவை போலே களோபரங்களை (உறுப்புக்களோடு கூடின உடலை) இழந்திருந்த ஆன்மாக்களுக்கு அவற்றைக் கொடுத்தல். அப்படி எத்தனைத் தடவைப் படைத்தாலும் பயன்படா தொழிந்தாலும் என்றேனும் ஒரு நாள் பயன்படும் என்று கருதி மேன்மேலும் படைப்புகளைச் செய்துகொண்டே போவான் என்கை. பிறிதோரிடத்திலும் இந்த ஆழ்வார். - சோம்பாது இப் பல்கூருவை எல்லாம் படர்வித்த வித்தா!" (வித்து-ஆதிமூலம்.) என்று கூறியுள்ளதையும் எண்ணி மகிழ்கின்றோம். இங்ங்னம் சிந்தித்தவண்ணம் மலையடிவாரத்திலுள்ள திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தை அடைகின்றோம். அருகிலுள்ள குழாயில் கை கால் முகம் கழுவி நீர் அருந்தி மலையேறி இறங்கிய களைப்பைப் போக்கிக் கொள்ளு கின்றோம். கோயிலின் முன்பு உள்ள திருமண மண்டபத் திற்கு வருகின்றோம். இங்கு நல்ல சிற்பவடிவங்களை யுடைய தூண்கள் உள்ளன. பொன்னன் உடல் கிழிக்கும் நரசிம்மர், வேணுகோபாலன், இரதி, மன்மதன், கருட வாகனத்தில் காட்சி தரும் திருமால், திரிவிக்கிரமர், 41. பெரி திரு. 4.9:2 42. திருநெடுந் 10 43. திருவாய் 2 10:11 44. பெரி. திருவந். 18