பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் 111 என்ற பாசுரத்தை அடியொற்றி அமைந்திருப்பதை எண்ணிய வண்ணம் வெளிப் பிராகாரத்திலுள்ள மண்டபத்திற்கு வந்து அமர்கின்றோம். இத்திருத்தலப் பயணத்தின் பயனைச் சிந்திக்கின்றோம்; ஆழ்வார் பெரு மக்கள் தம் திருக்கடைக் காப்புப் பாசுரங்களில் குறிப் பிட்ட பலன்கள் எல்லாம் நம் சிந்தனையில் எழுகின்றன. திருமாலிருஞ்சோலை மலை எம்பெருமான் பூதத் தாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார். ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என்ற ஆறு ஆழ்வார் களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றிருப்பதையும் எண்ணுகின்றோம். ஆசாரிய ஹிருதயம் என்னும் நூல் இத்தலத்தில் அர்ச்சாவதார குணங்களில் வியாமோகம் என்ற திருக்குணம் தழைத்து நிற்கும் என்று குறிப்பிடு கின்றது. 'தியாஜ்ய தேஹ வியாமோஹம், மருள் கள்கடியும் மயல்மிகுமொழிலே தழைக்கும்.' (தியாஜ்யம்-விடத்தக்கது; வியாமோஹம்-கழி பெருங் காதல்; மயல் மிகு பொழில்-திருமாலிருஞ்சோலைமலை. 'செஞ்சொற் கவிகாள்' (10.7:1) திருமாலிருஞ் சோலை மலையே (10.8:1) மங்க ஒட்டு (10.7:10) என்று தொடங்கும் திருவாய் மொழிப் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி இந்த ஆசிரியர் தியாஜ்ய தேஹவியாமோஹம்: என்கின்றார் என்பது ஈண்டு அறியத் தக்கது. பொழில்’ என்ற சொல்லுக்கு ஏற்பத் தழைக்கும்’ என்கின்றார். இந்த அழகர்மீது சில தமிழ் இலக்கியங்களும் தோன்றியுள்ளன. பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அவர்கள் இயற்றிய அழகர் அக்தாதியும், வேம்பத்துர் 50. ஆசா. ஹிரு. - சூத்திரம் 183 (புருடோத்தம நாயுடு பதிப்பு)