பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் 107 வடிவு கொண்டதோ? நின் திருவடியின் ஒளியே கீழ் முகமாகக் கிளர்ந்து சென்று ஆசன பதுமமாக வடிவு கொண்டதோ? நின் திருவரை (இடுப்புயின் ஒளி பீதக ஆடையாகவும் பலவகைப்பட்ட அணிகளாகவும் வடிவு கொண்டு பரவியதோ? அடியேனுக்கு உரைப் பாயாக’ என்ற ஆழ்வார் வாக்கைக் கொண்டே எம் பெருமானைக் வினவுகின்றோம். அவனுடைய பேரழகு நம்மைப் பிச்சேற வைத்துவிடுகின்றது. இப்பாசுரத்தைத் தொடர்ந்து இப்பதிகத்தின் ஏனைய பாசுரங்களையும் மிடற்றொலி கோண்டு ஓதி உளங் கரைகின்றோம். மலையை அருபவித்த ஆழ்வார் அம்மலையின்மீது கப்பும் கிளை யுமாகப் பனைத்துப் பூத்து நிற்கும் கற்ப கத்தருபோல் நிற்கும் அழகருடைய திருமேனியழயக அநுபவத்த ஆழ்வார் அதுபவத்தை நாமும் பெற முயல் கின்றோம். மூலவருக்கு முன்னால் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியே அழகர் என்னும் சுந்தரராசர். பெயருக்கேற்ற எழிலுடை வடிவம். அபரஞ்சித் தங்கத்தாலானவர் என்று சொல்லுகின்றனர். இவர் திருமுழுக்குப் பெறுவது நூபுரகங்கைத் தீர்த்தத்தால், மற்ற நீர் கொண்டு திருமுழுக்காற்றினால் அவரது திருமேனி கறுத்து விடுகின்றதாம். இவரே சோலை மலைக்கு அரசர். இந்த உற்சவரைத் தவிர ரீ சுந்தரபாஹா, சீநிவாசர், நித்தியோற்சவர் என்று வேறு சில உற்சவ மூர்த்திகளும் இத்திருத்தலத்தில் உள்ளனர். இவர்கள் வெள்ளியாலான வர்கள். இந்தக் கருவறையை அடுத்தப் பிராகாரத்தில் விநாயகர், சேனை முதலியார் முதலியோர் உள்ளனர். இத்தலத்து பைரவரே கூேத்திர பாலகராகத் திகழ்கின்றார். இவர் பெரிய வரப்பிரசாதி. திருக்கோயிலின் அர்த்த சாமப் பூசை முடிந்ததும் திருக்கோவிலின் கதவைத் திருக் காப்பிட்டுத் திறவு கோலை சேஷ்த்திர பாலகர் முன் வைப்பதும், மறுநாள் அதிகாலையில் அதனை எடுத்துத்