பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் புலவர் இம்மலையில் கண்ணபிரானும் நம்பி மூத்த பிரானும் (பலராமன்) எழுந்தருளியிருப்பதைக் குறிப் பிடுகின்றார், இவர்கள் எழுந்தருளியிருக்கும் சோலை மலையை நினை மின் மாந்தீர்! தெய்வம் பேணித் திசை தொழுதுச் சென் மின்!” என்கின்றார் புலவர். இதனை நினைத்தே நம்மாழ்வார், 'திருமாலிருஞ் சோலை மலை என்றேன்; என்னத் திருமால் வந்து என்நெஞ்சு நிறையப் புகுந்தான்' என்றும் தென்னன் திருமாலிருஞ் சோலைத்திசை கூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போ வேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே. : என்றும் கூறினார் போலும். மேலும், இளம் பெருவழு தியார் பலதேவன் மார்பில் திகழும் மாலையை இருங் குன்றத்தினின்று இழியும் சிலம்பாற்றுக்கு உவமை கூறி. மகிழ்கின்றார். மணிவாசகப் பெருமான் அவனருளாலே அவன் தான் வணங்கவேண்டும்’ என்று கூறிய கருத்தையே இக் கவிஞர், 'காறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை எதுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்’’’ (வீறு-வேறொன்றிற்கில்லாத சிரிப்பு; துறக்கம் மேல் நிலை உலகம்] என்று வேறுவிதமாகக் கூறுவர். சங்கமருவிய நூலாகிய சிலப்பதிகாரத்திலும் இந் நெடுமால் குன்றத்தைப்பற்றிய குறிப்பு காணப் பெறு கின்றது. கோவலனுக்கு மதுரை செல்லும் வழியைக் கூறும் மாங்காட்டுமறையோன் வாக்கில் இம்மலையின் மீது எழுந்தருளியுள்ள திருமால், அதன் மீதுள்ள புண்ணியச் சரவணம், பவக்ாரணி, இட்டசித்தி என்ற தீர்த்தங்கள் முதலியான விரிவாகக் கூறப்பெற்றுள்ளன." 53. திருவாய் 10, 8 :1 54. ஷை10.7:4 55. பரிபாடல்-15 அடி 15, 16. 56. சிலப் 11. காடுகாண் அடி 91-110.