பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ்சோலை வள்ளல் i 15 அழகரின் திருக்கோயிலை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியன் கட்டுவித்ததாக வரலாறு கூறும். பாண்டியமன்னர்கள் பலர் இத்திருக்கோயிலுக்குப் பலவி த மான திருப்பணிகள் செய்துள்ளனர். இத்திருக்கோயிலின் விமானத்திற்குப் பொன் வேய்ந்தவன் சடாவர்மன் சுந்தர பாண்டியன், விசயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக நாய்க்கர் மன்னர்கள் ஆண்டகாலத்தில் விசுவநாதநாயக்கர் என்பார் ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளார். இன்று அழகர் கள்ளழகர் என்ற பெயருடன் திகழ்கின்றார். இந்த வட்டாரத்துக் கள்ளர் குலமக்களின் தலைவன் என்பதால் இப்பெயர் பெற்றார் போலும், திருக் கோயிலுக்கு வருவோர் உள்ளங்களைக் கவரும் உள்ள ங் கவர் கள்வனாகத் திகழும் இவர் பொதுமக்கள் கருத்தில் 'கள்ளழகர்’ என்ற பெயருடன் வாழ்கின்றார் போலும். இங்ஙனம் பல்வேறு செய்திகளை அறிந்த நிலையில் மன நிறைவுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.