பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிப்புத்து ர் வேயர் பயந்த விளக்கு # # 9 'பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவை' போகத்தில் வழுவாக

  • இல்: த புதுவை'

என்ற ஆண்டாள் திருவாக்குகளால் இதனை நன்கு அறியலாம். விஷ்ணுவே முழுமுதற் கடவுள்' என்ற உண்மையைப் பாண்டியன் அவையில் நிலைநாட்டிப் பொற் கிழியறுத்துப் பட்டர் பிரான்’ என்ற பெயர் பெற்ற விஷ்ணு சித்தர் திருவ வதரித்த ஊர் இந்த ஊர்தான். இவர் சேஷ பூதராகிய தம் சொரூபத்தையும் (உண்மை நிலை) சேவியாகிய ஈசவர சொரூபத்தையும் அறவே மறந்து திருபல்லாண்டு என்ற திருமொழியால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்து தம் எல்லையற்ற அன்பைப் புலப்படுந்திய வரலாற்றை முன்னரே விளக்கியுள்ளோம். சர்வ இரட்ச கனையும் இரட்சிக்க வழி தேடித் தடுமாறி மங்களா சாசனம் செய்த வரலாறு நம்மை மயிர் சிலிர்க்க வைக் கின்றது. எம்பெருமான் வாழ்வையே தமது வாழ்வாக நினைத்த செய்தி நம் உள்ளத்தை உருக்குகின்றது. இளமையிலேயே இவர் எம்பெருமான் திருவுள்ளத் திற்கு எத்தகைய செயல் உகப்போ அதுவே தம்மால் செய்யத்தக்கது என்று உறுதி கொண்டிருந்தவர். வேதம் ஒதுவதுடன் நந்தவன கைங்கரியத்தையும் மேற்கொண் டிருந்தார். ஒரு நீர்ப்பாங்கான இடத்தில் வேலி வளைத்து அதனிடையே கிணறு குளம் உண்டாக்கி, வெண்தாமரை, செந்தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம்,மல்லிகை,முல்லை மாதவி முதலான நீர்ப் பூ நிலப்பூ கோட்டுப் பூக்களும் திருத்துழாய் முதலியனவும் மலிந்து பொலியுமாறு மலர் است. مسمس سامسس مس-سسس سمیه 6. நாச். திரு. 3:10 ?. ഞു 8:10 8. ഒു 12:10 9. மதுரைக் கூடலழகர் என்ற கட்டுரையில்(கட்டுரை-3)