பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii கழகத்தில் வடமொழித்துறையைச் சார்ந்த கற்று உணர்ந்து அடங்கிய சான்றோராகிய துணைப் பேராசிரியர் டாக்டர் வி வரதாச்சாரியார் என் ஆய்வுக்கு வழித்துணையாக அமைந்தது ஏழுமலையான் திருவுள்ளத்தாலேயாகும். ஐந்தாண்டுகள் ஆய்ந்து 1969-ல் பிஎச் டி. பட்டமும் பெற்றேன். இருபத்தைந்து ஆண்டுகள் இப்படிக் கழிந்தன. சிறியேனே இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் முதல் பிஎச். டி. பட்டம் பெற்றவன். ஐம்பது அகவைக்குமேல்தான் பிஎச். டி. பட்டம் வரும் என்பது உறுதியானதால் ஆய்வுக் காலத்தில் புேண்ணியத்தையும் புருஷார்த்தத்தையும்’ குறிக்கோட் பொருளாகக் கொண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் இவற்றை முறையாக அடையப் பெறும் நோக்கத்துடன் திவ்விய தேச யாத்திரையைத் தொடங்கினேன். என் இளையமகன் திரு. இராம கிருஷ்ணன் என்னுடன் வர பாண்டி நாட்டு யாத்திரை 1963 செப்டம்பரில் தொடங்கியது. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூர்,திருமெய்யம்,திருப்புல்லாணி, திருக்கூடல் (மதுரை), திருமோகூர், திருமாலிருஞ்சோலை சீவில்லிப்புத் துர், திருத் தண்கால்’ என்ற திருப்பதிகளை யும்; சோழநாட்டில் திருவரங்கம், உறையூர், கரம்பனூர் (உத்தமர் கோயில்), திருவெள்ளறை, அன்பில், திருப்பேர் நகர் (கோயிலடி) ஆகிய திருப்பதிகளையும் சேவிக்கும் பேறு பெற்றேன். அதன் பிறகு 1969 சூன் திங்கள் என் துணைவி, மக்கள் இருவருடன் பாண்டிநாட்டில் ஏனைய திருப்பதிகளையும், மலைநாட்டுத் திருப்பதிகளையும் தரிசித்தேன். இந்தப் பயணத்தில்.பாண்டிநாட்டுத் திருப்பதி யாத்திரையும், மலை நாட்டுத் திருப்பதி திருப்பயணமும் ஒருவாறு முற்றுப்பெற்றன. மலைநாட்டுத் திவ்வியதேச யாத்திரையின் அநுபவம்: மலை நாட்டுத்திருப்பதிகள் என்ற தலைப்பில் 1971 மார்ச்சுத் திங்களிலும்; 'தொண்டை நடுநாட்டு யாத்திரையின் அநுபவம் தொண்டை நாட்டுத் திருப்பதிகள்' என்ற தலைப்பில் 1978 ஆகஸ்டிலும் நூல் வடிவங்கள் பெற்றன.