பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத் துணர்வேயர் பயந்த விளக்கு 125 திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அழகிய மணவாளனும் பெரிய திருவடியின் மீது எழுந்தருளிக் கோதையைத் திருமணம் செய்து கொள்ளுகின்றான். இத்தெய்வத் திருமணம் பங்குனி உத்தரத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று முதல் அரங்க மன்னார் கோதையுடனும் பெரிய திருவடியுடனும் சீவில்லிபுத்துரிலேயே கோயில் கொண்டுவிடுகின்றார். இந்த வரலாற்று நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நம் மனத்தில் தோன்றிய வண்ணம் திருக்கோயிலை வந்தடைகின்றோம். அமைப்பிலும் எடுப்பிலும் காம் பீரியத்திலும் முன் நிற்பது எம்பெருமான் திருக் கோயிலே. பெரிய கோபுரத்தைப் பெற்றிருப்பதும் அத்தருமாளிகையே என்ற போதிலும், இந்தத் திவ்விய தேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்திருப்பது ஆண்டாள் திருக்கோயிலுக்குத்தான். ஆ த ல ல் முதலில் அப்பெருமாட்டியின் சந்நிதிக்கு விரைகின்றோம். இந்தச் சந்நிதி தெருவை விட்டுச் சற்று உள்ளடங்கியே உள்ளது.கோயிலின் முன்வாயிலில் முதன்முதலாக இருப்பது பந்தல் மண்டபம். இதனைக் கடந்து உள்ளே சென்றால் இடப்பக்கம் கல்யாண மண்டபம் இருப்பதைக் காணலாம். இதற்கு அடுத்தாற்போல் இடைநிலைக் கோபுரம் உள்ளது. இதனை க் கடந்து சென்றால் ஒரு வெளிப் பிராகாரம் இருப் பதைக் காண்கின்றோம். இவ்விடத்தில் இ ர ம பிரானுக்கும் சீநிவாசப்பெருமாளுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இவர்களை வணங்குகின்றோம். இடை நிலைக் கோபுரத்தை அடுத்துள்ள கொடிமரத்தைத் தாண்டிக் கொண்டு உட்பிராகாரத்திற்குச் செல்லு கின்றோம். இங்கு முதலில் நாம் காண்பது மாதவிப் பந்தல். அந்தப் பிராகாரத்தைச் சுற்றினால் நூற்றெட் டுத் திருப்பதி எம்பெருமான்களும் நமக்குச் சேவை சாதிப்பார்கள். அழகிய பன்னிற வண்ணங்களில் அவர்கள் ஓவிய வடிவங்களில் நமக்குக் காட்சி