பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量器较 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்று மிக அழகாகக் கூறியுள்ளார். இதில் தாழிக்கு வேதமும், அத்தாழியில் உள்ள தயிருக்கு அவ்வேதத் தில் சொல்லப்படும் அறம் பொருள் இன்பம் வீடுகளா கின்ற பலன்களும், அவற்றின் சாதனங்களும், நிறைத்து’ என்பதற்கு மேலெழுந்த வாரியாய்த் தோன்றும் தோற்ற மும், கடைந்து’ என்பதற்கு உள் நுழைந்து காணும் ஆராய்ச்சியும், வெண்ணெய்க்கு அட்சரம் மூன்றும். திரட்டுதலுக்கு எடுத்தலும் உவமேயங்களாக அமைந்து விளக்குதலைக் கண்டு மகிழலாம். இதனால்தான் பிரணவம் சகல வேதசாரமாகின்றது என்பதையும் அறிகின்றோம். இதனைச் சிந்தித்த வண்ணம் சீவில்லிபுத்துாரிலிருந்து பேருந்தில் திருத்தண் காலூரை நோக்கி வந்து கொண் டிருக்கின்றோம். திருத்தண்காலூர் சீவில்லிபுத்துளர். விருதுநகர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிற்றுார். விருது நகர் - தென்காசி இருப்பூர்தி வழியிலுள்ள சிவகாசி என்ற இருப்பூர்தி நிலையத்தில் இறங்கியும் இவ்வூருக்கு வரலாம், இரண்டு கல் தொலைவு பேருந்திலோ குதிரை வண்டியிலோ வரவேண்டும். நாம் வரும் பேருந்து திருக்கோயிலுக்கு நூறு கெஜ தூரத்தில் நிற்கின்றது. வண்டியிலிருந்து இறங்கித் திருக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். இஃது. அண்மையில் திருப்பணி செய்யப்பெற்றுப் புதுப்பிக்கப் பெற்றுள்ளது. . இத்திவ்விய தேசம் பூதத்தாழ்வாராலும் திருமங்கை யாழ்வாராலும் மங்களா சாசனம் செய்யப் பெற்றுள்ளது. தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளும் தண்பொருப்பு வேலை-தமருள்ளும் மாமல்லை கோவல் மதிள்குடந்தை என்பரே ஏவல்ல எங்தைக் கிடம்,' - 3. காஞ்சியில் இருக்கும் திருப்பதி தண்கா என்று வழங்கப்பெறும். இங்கு எழுந்தருளியிருப்பவர் விளக் கொளிப் பெருமாள் (தீபப் பிரகாசர்). வேதாந்த தேசிகர் திருவதரித்த தலம் இது. 4. இரண் திருவந் 10