பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் விளக்கேற்றி முகுந்தனைத் தொழுது ஆநந்தப் பெரு வெள்ளம் எய்தின வரலாற்றை நெஞ்சில் கொண்டு. திருக்கோவலூரைப் பாடுகின்றாள். இங்ங்னம் மூன்று திருத்தலங்களையும் பாடிய பிறகும் மனநிறைவு பெறாத ஆழ்வார்நாயகி ஆடவும் தொடங்குகின்றாள். இங்ங்னம் இவள் பாடுகின்ற படியைக் கேட்டும் ஆடுகின்ற படியைக் கண்டும் திருத்தாயார் :நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை?’ என்கின்றாள். சேதநலாபம் ஈசுவரனுக்குப் புருஷார்த்தமேயன்றி. ஈசுவரலாபம் சேத நனுக்குப் புருஷார்த்தமன்றே; அவ. னுடைய பேற்றிக்கு அவன் அன்றோ பதற வேண்டும்? நீ பதறுவது தகாது,” என்று குறிப்பிடுகின்றாள். இதனைச் செவிமடுக்கும் ஆழ்வார் நாயகி நறையூரையும் பாடத் தோடங்குகிறாள். பெடையடர்ந்த மட அன்னம் பிரியாது மலர்கமல மடல் எடுத்து மது நுகரும் வரல்உடுத்த திருநறையூர்' என்பது வாசுரம். அந்த நறையூரை அடைவது எந்நாளோ? என்கின்றாள் - இங்ங்ணம் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்ட வண்ணம் திருக்கோயிலின் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கும் திருத்தண்கா துர் அப்பனை வணங்கு கின்றோம். இந்த எம்பெருமானுக்கு அன்ன நாயகி, அகந்தநாயகி, அமுதநாயகி, ஜரம்பவதி என்ற நான்கு நாச்சிமார்கள் உள்ளனர். இவர்களையும் சேவிக்கின் றோம். தீர்த்தம் திருத்துழாய் பெற்று, சடகோபம் சாதிக்கப்பெற்ற நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நெஞ்சில் குமிழியிடத் தொடங்குகின்றது. متعهد عتیومیم منحصاحیه 7. பெரி திரு. 6.9:1