பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv இந்த நூலை யான் எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின ருக்கும் (Syndicate) சிறப்பாகப் பல்கலைக் கழகத்தை இயக்கி வரும் அதன் துணைவேந்தர் பேராசிரியர் கே. சச்சிதானந்த மூர்த்தி அவர்கட்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். காலத்திற்கேற்ற நூல்களை, சிறப்பாகப் பக்திப் பனுவல்களை, வெளியிட்டுச் சிறந்த முறையில் தமிழ்ப் பணியாற்றி வருபவர்கள் எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை பதிப்பகத்தார். ஏற்கெனவே எனது மலைநாட்டுத் திருப்பதிகள்', 'தொண்டை நாட்டுத் திருப்பதிகள்' என்ற நூல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்கு அவர்கட்கும், அவர்களது சென்னைக் கிளையைச் சிறந்த முறையில் திறம்பட இயக்கிவரும் அதன் பொறுப்பாளர் கந்தன் அடிமை திரு. எஸ். பி. சண்முகம்பிள்ளை அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்துகின்றேன். La sès$ p_#FÉ# unsă p;#5 (Supreme Court) நீதிபதி திரு. பா. ச. கைலாசம் அவர்களின் அரிய நட்பினைப் பெற்றது இறைவனது திருவருளாலாகும். பல்லாண்டுகள் .ெ ச ன் ைன உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டிய இவரை அரசு உயர்நீதி மன்றத்து நீதிபதியாக்கியது. பல ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்துப் பணியாற்றித் தமது நேர்மையாலும் திறமையாலும் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் கோடாமையாலும்? தலைமைநீதிபதியானார்.ஓராண்டுக்குமேல் அப்பொறுப்பில் பணியாற்றிப் புகழ் மாலைகளைச் சூடிய இவருக்கு டில்லி அரசு உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிப் பதவியை வழங்கியது. இவருடைய அமைதி, அடக்கம், சீலம், பரிவு முதலிய அருங்குணங்கள் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தன; இவருக்குப் பெருமதிப்பையும் நல்கின.