பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் சீமந் நாரயணனே முழுமுதற் கடவுள் என்பதை ஆழ்வார் பெருமக்கள். தம் பாசுரங்களில் பல் வேறு விதமாக நிலை நாட்டியுள்ளனர். நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதியில் ஒரு பாடல். 'முதலாங் திருவுருவம் மூன்றென்பர்; ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்-முதல்வா! கிகரிலகு கார் உருவா! கின்னகத்த தன்றே புகரிலகு தாமரை பூ.' இலகு-ஒத்து விளங்கும்; புகர்-தேசு; இலகு-மிக்கு விளங்கும்) - இப்பாடலில் மேற்கூறப்பெற்ற சித்தாந்தம் நிலை நாட்டப் பெற்றுள்ளது. சீமந் நாரரயணன் ஒருவனே பரதத்துவம் என்பது தோன்ற முதல்வா!' என்று விளிப்பது கருதத் தக்கது. சேவிக்கும்பொழுதே எல்லாத் தாபங்களும் ஆறும்படியான திருமேனி கொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகர் இலகு கார் உருவா!’ என்றும் விளிக்கின்றார். இதனையே திருமங்கையாழ்வாரும். 'ஓருருவம் பொன்னுருவம்; ஒன்று செந்தி: . ஒன்றுமா கடலுருவம்; ஒத்து கின்ற மூவுருவும் கண்டபோது, ஒன்றாம் சோதி - முகிலுருவம் எம்மடிகள் உருவங் தானே ?? 1. பெரி-திருவந்-72 2. திருநெடுந் 2