பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்று அருளிச் செய்து பரதத்துவ நிர்ணயம் பண்ணி யிருப்பது கருதத் தக்கது. இதில் அவரவர்களுடைய தொழிலுக்கு அவரவருடைய உருவம் பொருத்தமா யிருப்பதைச் சொல்லுகின்றார். நான்முகன் உருவம் பொள் னுருவம்; பொன் பல்வேறு அணிகளைச் செய் வதற்கு உரித்தாயிருப்பது போல, பதினான்கு உலகங் களையும் படைப்பதற்கு உரிய உருவமென்று தோற்றி யிருக்கும். நெருப்பின் இயல்பு அனைத்தையும் எரித்து அழிப்பதாகையால், உருத்திரனுடைய இயல்பை நோக்கின் இந்த அகிலத்தையெல்லாம் அழிப்பதற்கு உரித்தாயிருக்கும் என்று தோற்ற விருக்கும். கண்டார்க்கு விடாயைத் தீர்ப்பதும், பல்வேறு பிராணிகளையும் இரத்தினம், முத்து முதலிய எல்லாப் பொருள்களையும் வேறுபாடின்றித் தன்னுள் வைத்துக் காப்பதும் கடலின் இயல்பாகத் தோற்றுகின்றது; அப்படியே எம்பெருமானது இயல்பை நோக்கின், அண்டினாரின் தாபங்களைத் தீர்க்குமவராயும், அவர்களைத் தன் அன்பினால் காப்பவராகவும் இருப்பது தோற்ற விருக்கும். மாகடலுருவம்' என்பதையே இறுதியில் முகிலுருவம்’ என்று மீண்டும் மூதலிக்கின்றார். மேற்குறிப்பிட்ட நம்மாழ்வார் பாசுரத்தில் எம். பெருமானிடத்துள்ளதாகக் குறிப்பிடப் பெற்றிருக்கும் தாமரைப் பூவே இப்பரதத்துவத்தை அறுதியிடுவதாக இருக்கும். சிவன் நான்முகனிடமிருந்து தோன்றியதாகவும் அந்த நான்முகன் எம்பெருமானின் திருவுந்திக் கமலத்தில் தோன்றியதாகவும் சாத்திரங்கள் சொல்லியிருப்பதால், அந்தத் தாமரையையுடைய எம்பெருமானே பரதத்துவமாக இருக்கத் தகுதியுண்டென்று அறுதியிடுக்கின்றார் ஆழ்வார். மேலும், திருமங்கை மன்னன் சித்திரித்துக் காட்டும், 'நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்ட நால்வாய் ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமர ரோடும்