பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் 157 மண்டலம் கொண்டு பெரிய பிராட்டியாரும் பூமிப் பிராட்டி யாரும் இருபக்கங்களிலும் இருக்கும் நிலையில் சேவை சாதிக்கும் ஆதிநாதப் பெருமானைக் கண்டு வணங்கு கின்றோம் இந்த எம்பெருமான் பற்றிய நம்மாழ்வார் பாசுரங்கள் நம்மிடற்றொலியாக வெளிப்படுமாறு ஓதி ஓதி உளங்கரைகின்றோம். இந்த ஆதிநாதருக்கு முன்பக்கத் திருப்பவரே உற்சவராகிய பொலிந்து கி.1ற பிரான். இவர் பக்கத்தில் உற்சவர்களாக சீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் நிற்கின்றனர். இவரையும் நம்மாழ்வார், "இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கி,பரும் வலிந்து வாதுசெய் வீர்களும் மற்றுநுங் தெய்வமும் ஆகிங்ல்:றான் மலிந்து செந்தெல் கவரி வீசும் திருக்குரு கூரதனுள் பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.”* (சாக்கியர்-பெளத்தர்.) என்ற பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பாசுரத்தைப் பாடி இவரையும் வணங்குகின்றோம். மூலவர் ஆதிநாதரும் அவர் பக்கத்திலிருக்கும் நாச்சியார்களும் சுதையினாலானவர்கள். இத்திருக்கோயி லில் ஆதிகாதவல்லியும் குருகடர்காயகியும் தனிக்கோயில் நாச்சியார்களாகத் திகழ்கின்றனர். இவர்களைத் தவிர தெற்குப் பிராகாரத்தையொட்டிய மேடையின் மீது வராக நாராயணர் ஞானப் பிரானாக முனிவர்கட்குக் காட்சி நல்கும் நிலையில் நமக்கும் சேவை சாதிக்கின்றார். இவரிடம் சென்று இவரை வணங்கி நமக்கும் ஞான பிட்சை' அருளுமாறு வேண்டுகின்றோம். 24. திருவாக் 4.10:3