பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ஆண்டவனைவிட அடியாரே மிகவும் பெருமை பெற்றவர் என்பது வைணவ சித்தாந்தம். மற்றைய ஆழ்வார்கள் யாவரும் எம்பெருமானைப் பாட மதுரகவி யாழ்வார் மட்டிலும் நம்மாழ்வாரையே பாடியிருப்ப தனால் இதனை அறியலாம். கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற திருமொழி நம்மாழ்வாரின் புகழையே பாடு கின்றது. அத்தகைய பெருமைவாய்ந்த நம்மாழ்வாரின் சந்நிதிக்கு வருகின்றோம். வீற்றிருக்கும் திருக்கோலத் தில் எழிலே வடிவமாகக் கொண்டு இலங்கும் வேதம் தமிழ் செய்த வித்தகரைக் கண்டு வணங்குகின்றோம், பொதுவாக திருமால் கோயில்களில் நம்மாழ்வாரின் திருமேனி கூப்பிய கையராய்ச் சிலை வடிவிலும் செப்பு வடிவிலும் காணப் பெறும். ஆனால், இத் தலத்தில் அவர் உபதேசிக்கும் ஞான முத்திரையுடன் காட்சி தருகின்றார். மதுரகவியாழ்வாரின் சில பாசுர வரிகள் நம் உள்ளத்தை உருக்குகின்றன. -

நண்ணித் தென்குரு கூர்நம்பி என்றக்கால் அண்ணிக் கும்.அமு துறுமென் நாவுக்கே’’’’ (அண்ணிக்கும்-பரமபோக்கியமாக இருக்கும்)
  • தேவு மற்றறி யேன்.குரு கூர்நம்பி

பாவின் இன்னிசை பாடித் திரிவனே." (தேவு-தெய்வம்) :அன்னை யாய் அத்த னாய்என்னை ஆண்டிடும் தன்னை யான்சட கோபன் நம்பியே' (அத்தன்-தந்தை) என்ற பாசுரப்பகுதிகளில் ஆழங்கால் படுகின்றோம். வகுள பூஷண பாஸ்கரராகிய நம்மாழ்வாரே உலகுய் யத் தோன்றிய குருமூர்த்திகளுள் முதன்மையானவர். ஆழ்வார்களுள் தலையாய ஆழ்வாராகத் திகழ்பவர். இயல்பாகவே மெய்யுணர்வு பெற்று தாம் உணர்ந்த 25. கண்ணிநுண்-1 26. டிை.2 2? . ഒു.-4