பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ஆழ்வார் என்றே வழங்குவர். நம்மாழ்வார் இருந்த மரத்தின் பகுதியில் நாடோறும் திருமஞ்சன வழிபாடு நடைபெற்று வருவதையும் காண்கின்றோம். ஒரே மரமாக இருக்கும் இது பல பொந்துகளுடன் திகழ்கின்றது. இஃது ஏழு பிரிவுகளாகப் பிரிந்து திருக்கோயில் விமான முழுவதும் பரவி நிற்கின்றது. இது காய்த்த போதிலும் காய்கள் பழுக்காமல் பிஞ்சிலே உதிர்ந்து போகின்றன. இத்தலத்தைச் சுற்றியுள்ள புளிய மரங்கட்கும் இதே நிலை தான். திருபுளியாழ்வாரின் அடியில் நம்மாழ்வார் தனிக் கோயிலில் சிலை வடிவில் காட்சி தருகின்றார். நம்மாழ்வாரது பூத உடலை அடக்கம் செய்த இடத்தில் தான் நம்மாழ்வாரின் திருக்கோயிலை அமைத்து நம்மாழ்வாரின், திருமேனியைப் பிரதிஷ்டை செய் துள்ளனர். திருப்புளியாழ்வாரைச் சுற்றிய பீடத்தின் மதிற் சுவர்களில் மேல் வரிசையில்36 திருப்பதி எம்பெருமான் களின் திருவுருவங்களும் கீழ்வரிசையில் ஆழ்வாராதிகளின் திருவுருவங்களும் அதற்கும் அடியிலுள்ள வரிசையில் யானை உருவங்களும் அமைக்கப் பெற்றுள்ளன. உற்சவ மூர்த்தமான ஆழ்வார் சோபன மண்டபத்திற்கு எதிரே யுள்ள பொன் குறட்டில் எழுந்தருளியுள்ளார். வைணவர்கள் மாறன்’ என்ற சடகோபரையே ஏற்றமுடன் போற்றுவர். கம்பநாடனுக்கு நம்மாழ் வாரிடம் மிக்க ஈடுபாடு உண்டு இராமகாதை பாடு வதற்கு முன் நம்மாழ்வாரின் திருவடிகளை நினைந்து வணங்கியிருப்பதையும், அஷ்டப்பிரபந்தம் பாடியருளிய திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்காரும் நம்மாழ் வார் துதியைக் காப்பாக அமைத்திருப்பதையும் சிந்தித்துப் பார்க்கின்றோம். கம்பன் சடகோபர் அந்தாதி என்ற ஒரு பிரபந்தத்தையே நம்மாழ்வார்மீது பாடியுள்ளார். இத்திவ்விய தேசத்தைப் பற்றிய திவ்வியகவியின் பாசுரம் நம் நினைவிற்குவர அதனையும் ஒதுகின்றோம்.