பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோளுர் வைத்தமாகிதி இந்த உலகில் ஒருவன் ஒரு பொருளின்மீது பற்று வைத்திருந்து, அப்பற்றும் அளவற்றதுமாக இருந்தால், அப்பற்று அப்பொருளுடன் நின்று விடாமல், அதனோடு சம்பந்தம் பெற்ற பொருள்களிலும் பெருகிச் செல்லும் என்பதை நாம் அநுபவத்தால் அறியலாம். அங்கனமே, பாகவத பக்தி என்பது பகவத் பக்தியின் எல்லை நிலமாக உண்டாகும். இன்னும் தெளிவாகக் கூறினால், பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப் படுத்தும் எனலாம். எம்பெருமானுடைய பாதுகைகளில் நாம் ஆதரம் வைத்து அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொள்வதும், அவற்றைத் தலைமீது அணிந்து கொள்வதும் அவற்றை நீராட்டிய தீர்த்தத்தைப் பருகுவதும் செய் கின்றோமன்றோ? இதற்குக் காரணம் நாம் எம்பெருமா னிடம் கொண்டுள்ள அளவற்ற பக்தி அல்லவா? மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளியுள்ள திருவாய்மொழியில், 'அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியார்களே.' என்று பாகவத சேஷசத்துவாதிசயத்தைப் பேசுவது பகவத் சேஷத்துவத்தின் உறைப்பையே பேசின. படியாகும் என்பது நாம் அறியவேண்டியதொன்றாகும். ஆழ்வாரும் தம்மை, 1. திருவாய் 3.7 : 1.0 2. சேஷத்துவம்-அடிமை நிலை. இதன் ;எதிர்ப்பதம் சேவித்துவம்; அதாவது தலைமை நிலை.