பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼等强 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நேர்பட்ட கிறை மூ வுலகுக்கும் காயகன் தன் அடிமை கேர்பட்ட தொண்டாதோண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்’’’ என்று தம்மைச் சொல்லிக் கொண்டிருப்பதும் இதனாலே யன்றோ? 'ஓம் நமோ நாராயணாய என்னும் திருமந்திரத்தில் அகங்காரமும் மமகாரமும் நீங்கப் பெற்று பகவத் சேஷத்துவம் உள்ள படி பிரகாசிப்பது நமஸ்ஸிலே’ என்று சாத்திரங்கள் பகரும். அந்த பகவத் சேஷத்துவத்தின் எல்லை நிலமான பாகவத சேஷத்துவம் இந்த 'நமஸ்ஸில்ே அநுசந்திக்கப் பெறவேண்டும் என்பதை அவை வற்புறுத்துகின்றன. இந்தப் பாகவத சேஷத்துவம் திருமந்திரத்தினுள் பிரணவத்தின் உள்ளீடான அகாரத்தில் தோன்றும் என்று சிலரும், உகாரத்தில் தோன்றும் என்று. சிலரும் சொல்வார்கள. இதனை விளக்குவோம். ஒரு பொருள் ஒருவனுக்குச் சொந்தமாக உள்ள தென்று வைத்துக் கொள்வோம். அந்தப் பொருள் அவனுக்கும், அவன் வழிவருவோருக்கும், அநுபவித் தற்கும் விற்றற்கும் பிறருக்குத் தானம் செய்தற்கும் இன்னும் இன் விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ள ற்கும் உரித்தாக இருக்கும்போதுதான் அஃது அவனுடைய சொந்த சொத்து எனக் கூறுவதற்கு இடம் தரும். அதைப் போலவே, பகவானுக்கு உடைமைப் பொருளாக இருக்கும் சீவன், அப்பகவானும் அவன் சம்பந்தம் பெற்ற பாகவதரும் அநுபவிக்கவும் தங்கள் இச்சைக்கேற்ப விநியோகம் கொள்ளவும் தகுதியுடையனா யிருக்கும் நிலையில்தான் சேஷத்துவ பூர்த்தி பெற்றவனா 3. திருவாய் 8.9 : 11 கி. முமுட்கப்படி-90