பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளுர் வைத்தமாநிதி f67 அக்காலத்தில் ஒருநாள் இரவில் இவர் திருக்கோளூர் எம்பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதியவர் தென் திசை நோக்கிக் கண் செலுத்தினார். அப்பக்கத் தில் வானுறவளர்ந்து விளங்கும் திவ்வியமான பேரொளி யைக் கண்டு வியப்புற்றார். இப்பேரொளி இங்ங்னமே இரண்டு மூன்று நாட்களிலும் தொடர்ந்து காணப்பெற்றது; அச்சுடர்த் திரள் முச்சுடரொளியிலும் மிக்குத் திகழ்ந்தது. அதனை அருகிற்சென்று பார்த்துத் தெளியக் கருதினார் மதுரகவி. அப்பெருஞ்சோதியைக் குறியாகக் கொண்டு அதிவிரைவாக நெடுவழி கடந்து ஆழ்வார் திரு நகரியை அடைந்தார். அடைந்தவர் அந்நகரில் அவதரித்தருளியுள்ள யோகநிலையிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி விளக்கத் தைச் சேவித்து இதுவே அத்தொலைதுாரம் பிரகாசித்த சோதி என்பதை அறிந்து வியந்தார். அவருடையதிருமேனி யும் தான் கேள்வியுற்றிருந்தபடியே பிரகிருதி சம்பந்தமற்றி ருப்பதையும் கண்ணுற்றார். -


வியப்புடன் நின்ற மதுரகவி அத்திருமேனிக்குக் கட்புலன் உண்டோ என்று சோதிக்கும் பொருட்டு அத் திருமேனியின் முன்னிலையில் ஒரு சிறு கல்லை எடுத்துப் போட்டார். கல் விழுந்த ஒலியைக்கேட்ட நம்மாழ்வார் தம் திருக்கண்களை த்துப் பார்த்தருளினார். உடனே மதுரகவிகள் வாய்ப்புலனும் உண்டோ என்று எண்ணி, செற்றதில் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்து எங்கே கிடக்கும்!” (செற்றது-அசேதமான உடல்; சிறியது-அணுவளவான சீவான்மா.) - என்று விண்ணப்பித்தார். நம்மாழ்வாரும், 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ (அத்தை-உடலைச்சார்ந்த சுக துக்கங்களை; தின்று அநுபவித்துக் கொண்டு; அங்கே.அந்த உடலிலேயே.)