பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்று விடையருளி செய்தார். அதுகேட்டு மதுரகவிகள் மிக மகிழ்த்து நம்மாழ்வாரின் ஞானத்தைக் கொண்டாடி இவரை யடைந்து தான் கடைத்தேறக் கருதி இவர் திருவடிகளில் தாளும் தடக்கையும் கூப்பி விழுந்து தண் டனிட்டு அவரையே ஞானகுருவாகக் கொண்டார். அதுமுதல், மதுரகவிகள் தான் ஆழ்வாரிடம் உபதேசம் பெற்ற திவ்வியப் பிரபந்தங்களைக் கைத் தாள மெடுத்துப் பண்ணிசையோடு பாராயணம் செய்துக் கொண்டு திருக்கூர் நம்பிக்கு முதல் சீடராய், பரதாழ்வானுக்குப் பணிவிடை புரிந்தொழுகின சத்துருக் காழ்வானைப் போல், பகவத் பக்தியைவிட பாகவத பக்தியையே சிறப்பாக அருட்டித்துக்கொண்டு வாழ்வா ராயினர். அப்பொழுது ஆழ்வார்விஷயமாகக் கண்ணிநுண் சிறுத்தாம்பு’’ என்ற திவ்வியப் பிரபந்தத்தையும் பாடியருளினார். ‘'தேவுமற்று அறியேன் குருகூர் கம்பி பரவின் இன்னிசை பாடித் திரிவேனே' என் த பாசுரப் பகுதியினால் மதுரகவிகளின் வாழ்க்கையை ஒருவாறு அறியலாம். பரமபாகவதரான ஆழ்வாரையே அன்னையாயும் அத்தனாயும் தெய்வமாயும் கருதிக் கைங்கரியம் புரிந்துவந்த மதுரகவிகளின் பிரபந்தம் வைணவர்களால் நமப்பதத்தின் பொருளைக் காட்டுகிற தாகப் போற்றப்படுகின்றது. இங்ங்னம் மதுரகவிகளைப் பற்றிச் சிந்தித்த வண்ணம் *நல் வளஞ்சேர் பழனத் திருக்கோளுரை' நோக்கி வரு கின்றோம். வருங்கால் இத்திவ்விய தேசம் பற்றிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் நம்மனத்தில் குமிழி யிடத் தொடங்குகின்றது. இத்திருவாய்மொழி தாய்ப் 8. கண்ணிநுண்-2 9. திருவாய் 6. : 2