பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளுர் வைத்த மாநிதி 169 பாசுரமாக அமைந்துள்ளது. திருக்கோளூர் சென்று அவ்விடத்து எம்பெருமானுடன் கலந்து அநுபவிக்க வேண்டும் என்ற ஆழ்வாருடைய விருப்பம் இத்திருவாய் மொழியாகப் பரிணமித்துள்ளது. பராங்குச நாயகியின் படுக்கையில் அவளுடன் படுத்துக்கொண்டு அவள் விரகதாபத்துக்கு உபசாாங் கள் பண்ணிக்கொண்டிருக்க திருத்தாயார் படுக்கை யைத் தடவிப் பார்க்கின்றபோது, தன் மகள் காணப் பெற்றிலள் தன் மகளுக்குத் திருக்கோளூர் எம்பெரு மானிடத்திலிருந்த கழிபெருங்காதலினை (வியா மோஹம்) நன்கு அறிந்தவனாதலின் அப்பதிக்கே தன் மகள் சென் நிருத்தல் வேண்டுமென்று அறுதியிட்டுரைப்பதாகச் செல் கின்றது. இத் திருவாய்மொழி. தனியே சென்ற தன் மகளின் போக்கை நினைந்து கவல்கின்றாள் திருத்தாயார். பெரிய திருமொழியில் வயலாலி மணவாளன் பரகால நாயகியின் கையைப் பிடித்துக்கொண்டு போகிற நிலை யைக் கண்டு திருத்தாயார் பேசுகின்றதாகவுள்ள கள்வன் கொல்பானறியேன்” என்ற திருமொழி இத் திருவாய் மொழியுடன் ஒருபுடை ஒத்திருப்பதை எண்ணுகின்றோம். அகப் பொருள் நூலார் இதனை உடன் போக்கு’ என்று வழங்குவதையும் சிந்திக்கின்றோம். ஆளவந்தார் கோஷ்டியிலே நிகழ்ந்த ஓர் இதிகாச மும் நம் நினைவிற்கு வருகின்றது. உண்ணுஞ் சோற்றிற்’ பிராட்டிக்கு அஞ்ச வேண்டுவது அதிகமோ, கள்வன் கொல்லிற் பிராட்டிக்கு அஞ்ச வேண்டுவது அதிகமோ என்ற ஆராய்ச்சி நிகழ்ந்ததாம். அவன் குழுமியிருந்த முதலிகள் கள்வன் கொல்லில் இருவராய்ப் போனமை சொல்லுகிறது; உண்ணும் சோற்றில் மகள் தனியே போனமை சொல்லுகிறது. இருவராய்ப் போனவர்களுக்கு 10. பெரி. திரு 3.7:3