பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் AAAALLLLLSAAAASeeMMiSAeeM AAAA SAAAAA SAAA AAAA S வயிறெரிய வேண்டுவது அத்தனை அவசியமன்றே; தனியே வழி போனவளுக்கன்றோ அதிகம் வயிறெரிய வேண்டுவது!! என்றார்களாம். அப்பொழுது ஆளவந்தார், அங்ங் னன்று காண்மின். தனியே போன வளைப்பற்றி ஒரு பயமில்லை; இருவராய்ப் போனவிடத்திற்குத்தான் வயிறெரிய வேணும்’ என்று அருளிச் செய்தாராம். இதன் கருத்தை விளக்குவோம். தனியே போனவள் தான் கருதிச் செல்லும் இடத்திற்கு யாதொரு இடையூறுமின்றிச் சென்று சேர்ந்திடுவள். இருவரும் செல்லுங்கால் ஒருவ ரோடொருவர் கொண்டுள்ள காதலுக்கு ஊற்றுவாயாகை யாலே ஒருவரால் ஒருவர் மயங்கி விழுந்து என்னாகுமோ! என்னாகுமோ என்று வயிறெரிய வேண்டியிருக்கும் என்பதாகும். - இத் திருவாய்மொழியின் இன்சுவைமிக்க ஈட்டின் உரை. ஆனாலும் எங்கேனும் போகிலும் இருவராயல் லதிராது அங்கு. தனியே போன இவள் என்படுகிறாளோ என்று மிகவும் நொந்து கூப்பிடுகின்றாள் இவளுடைய திருத்தாயார். இது சுவைத்து மகிழத் தக்கது. திருத்தாயார் இவ்வாறு பேசுகின்றாள்: உண்ணும் சோறு பருகுர்ே தின்னும்வெற் நிலையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென் ஹேகண்கள் நீர்மல்கி மண்ணினுள் அவன்சீர் வளமிக் கலம் ஊர் வினவி திண்ணம் என்இள மான் புகு ஊர்திருக் கோளுரே. {வினவி-விசாரித்து; புகும் ஊர்.சேரந்த இடம்.) முன்னிரண்டடிகளில் ஆழ்வாருடைய உண்மையான தன்மை கூறப்படுகின்றது. சோறு, நீர் வெற்றிலை 11. திருவாய் 6.1:1