பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோளுர் வைத்த மாநிதி 五?? கொள்வரோ என்ற அச்சத்தால் துஞ்சா திருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே; கண்ணாரக் கண்டு, கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே'. காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை; கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை. நிதியானது சித்தாஞ்சனம்' அணிந்த சில: பாக்கியசாலிகட்கே கிடைக்கும்; எம்பெருமானும் பக்தி சித்தாஞ்சனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கி.பவான்களுக்கே கிடைப்பன். நிதியுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் எனக்கு ஆரும் நிகரில்லையே." 'மாறுளதோ இம் மண்ணின் மிசையே', 'இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே' என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்தவனை உலக மெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர். நிதியை இழந்தவன் கதறிக்கதறி யமுவன்; எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. சீராமனாகிய வைத்த மாநிதியை இழந்த பரதாழ்வான் சபையில் கதறியழுதானன்றோ? பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி, அழுதேன்'," "இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே', 'எழில்கொள் நின் திருக்கண்ணின் நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே, உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்'," என் சொல்லிப் புலம்புவனே'," என்று இப்படியெல்லாம் கதறியழுவார்கள். 25. திருவிருத்-97 26. இராமாநுச. நூற்-47 27. திருவாய் 6. :9 28. பெருந் தொகை-1838 29. முத. திருவந் 16 30. பெரு. திரு 7:4 31. பெரு. திரு 7:? 32. திருவாய் 5. 8: 33. திருவிருத்-86 பா. தி-12