பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 2 செயலை நினைந்த வண்ணம் திருக்கோட்டியூர் என்ற திவ்விய தேசத்தைச் சேவிக்க எண்ணுகின்றோம். தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டிலுள்ள பதினெட்டுத் திவ்விய தேசங்களுள் திருக்கோட்டியூரும் ஒன்று. இத் திருப்பதி இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புத்துார் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார். மானா மதுரை-திருச்சி இருப்பூர்திப் பாதையில் கல்லல்’ என்ற நிலையத்தில் இறங்கி எட்டு மைல் மேற்கு நோக்கிச் சென்று இவ்வூரை அடையலாம்; அல்லது சிவக்ங்கை யில் இறங்கி பேருந்து மூலம் வடக்கு நோக்கிப் பதினாறு மைல் பயணம் செய்து இவ்வூரைச் சேரலாம். மதுரை திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடியிலிருந்து வருபவர்கள் திருப்புத்துார் வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிச் சிவகங்கை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றும் இவ்வூருக்குப் போகலாம். நாம் காரைக்குடியிலிருந்து பேருந்து மூலம் திருப்புத்துளர் வழியாக இவ்வூருக்குப் பயண மாகின்றோம். பேருந்தில் செல்லும் ப்ொழுதே திருக்கோட்டியூர்? என்ற பெயரைப் பற்றி நம் மனம் ஆராயத் தொடங்கி விடுகின்றது. முதலில் புராணக் கண் திறக்கின்றது. மணிமுத்தாற்றின் கரையிலுள்ள இந்தத் திருப்பதி முற்காலத்தில் கதம்ப முனிவரின் புண்ணிய ஆசிரம மாக இருந்தது. இரணியன் மூவுலகங்களையும் ஆட்சி செய்து தேவர்களை நைகின்றான். அவனை எப்படி ஒழிப்பது என்று தெரியாது திகைக்கின்றனர் தேவர்கள். கதம்ப முனிவர் உறையும் இத் திருத்தலத்தில் அரக்கன் எவனும் புக (ցԲւգան Ֆ என்ற சாபமிருந்ததால், மும்மூர்த்திகளும் தேவர்களும் சூழ்ந்து ஆழ்ந்து யோசிக்க இவ்விடத்தைத் தேர்ந்து எடுத்து ஒன்று கூடுகின்றனர். திருமால் நரசிங்க அவதாரம் எடுத்துத் தன் வாளுகிரினால் இரணியனை வதைப்பது என்று முடிவு செய்கின்றனர். தேவர்கள் யாவரும் கோஷ்டியாகக்