பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் மான் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றான். இந்த எம்பெருமானுக்கு கிகளில் முகில் வண்ணன்' என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. சந்நிதியில் இத்திருத் தலம் பற்றிய திருவாய்மொழிப் பாசுரங்களை மிடற்றொலி பாக அன்புருகப் பாடிச் சேவித்த வண்ணம் எம்பெரு கானின் திவ்விய மங்கள விக்கிரகத்தின் அழகில் மூழ்கி நிற்கின்றோம். இங்ங்னம் திருப்பேரெயில் ஆழி அம்கை பன் மீதுள்ள பாகசங்களை ஒதியதும் எம்பெருமானின் நித்திய கைங்கரியத்திலே ஆழ்ந்தது போன்ற அநுபவத் தைப் பெறுகின்றோம். இந் நிலையில் திவ்விய கவியின் இத் திருப்பதி பற்றிய பாசுரம் நினைவிற்கு வருகின்றது. 'அரைசாகி வையமுழு தாண்டாலும் இன்பக் கரைசார மாட்டார்கள் கண்டீர்-முரைசாரும் தென்திருப்பேரைப் பதியான் சீர் கேட்டு காவிலவன் தன்திருப்பேரைப் பதியா giri.” (வையம்-நிலவுலகம்; இன்பக் கரை-முத்தியுலகம்] என்ற பாசுரத்தை இனிக்க இனிக்க ஓதி உளங்கரைகின் றோம். இந்த நிலையில் ஆசாரிய ஹிருதயத்தின், சென்று சேர்வார்க்கு உசாத்துணை அறுக்கும் செளக்தர்யம், மாநகரிலே கோஷிக்கும்.' |செளந்தர்யம்-அழகு, மாநகர்-திருப்பேர் எயில்; கோஷிக்கும்-ஒலிக்கும்.) 85. ഒു 7. 3: 10 36. நூற் திருப் அந்-52 37. ஆசா. ஹிரு-170 (புருடோத்தம நாயுஇ பதிப்பு:)