பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அவருக்கு வழங்கிய பின்னரே தம் வீடு திரும்புவார். ஒரு நாள் தீட்சிதர் வருவதற்கு அதிகத் தாமதம் ஏற் பட்டது. அர்ச்சகர் திருக்கோயில் முன் மண்டபத்தில் ஒருவருடன் சொல்லாடிய வண்ணம் காத்திருந்தார் அங்கிருந்த சிலர் தீட்சிதர் அதோ சந்நிதிக்குள் போகிறார். நீரும் செல்க' என்று அர்ச்சகரைத் துண்ட அவரும் சந்நிதிக்குள் விரைந்தார். எங்கும் தீட்சிதர் காணப்பெறவில்லை. அன்று காலையில்தான் தீட்சிதர் பரமபதித்தார் என்ற செய்தி பிற்பகலில் தெரிய வந்தது. அர்ச்சகர் இச் செய்தியைப் பலரிடம் தெரிவிக்க. தீட் சிதர் ஆன்மா ஆழ்வார் திருவடிகளில் கலந்தது” என்று சொல்லி அனைவரும் பாரித்தனர். இன்றும் பலர் தீட்சி தர்க்குச் சிறை வீடு தந்து பல துன்பங்களைப் போக்கிய குழைக்காதர் பாமாலை"யைப் பாராயணம் செய்து வருகின்றனர். இந்த நூலையும் நூலெழுந்த வரலாற்றையும் தென் திருப்பேரெயில் ஆசுகவி அபிநவ காள மேகம் அனந்த கிருஷ்ண அய்யங்கார் அவர்களிடமிருந்து ஐயரவர்கள் பெற்றுக்கலைமகளில் 1939-இல் வெளியிட்டும்,பின்னர் அவர் திருக்குமாரர். 1947-இல் சிறு நூல் வடிவில் வெளியிட்டும் வழங்கினர். இச் செய்தியை அறிந்த நிலையில் எம்பெருமானிடம் பிரியாவிடை பெற்றுச் சீவைகுண்டம் என்னும் திவ்விய தேசத்தை நோக்கி விரைகின்றோம்.