பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 'அணிபொழில் சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டியூர்' (அணிபொழில் - அழகிய சோலைகள்; சேல்கள் மீன்கள்.) என்றும் குறிப்பிட்டிருப்பதை எண்ணி மகிழ்கின்றோம். ஆழ்வார்கள் பாசுரங்களில் காட்டப் பெற்றுள்ள இயற்கை வருணனையில் நம் மனம் ஆழங்கால் படத் தொடங்கு கின்றது. திருக்கோட்டியூர் அருகிலுள்ள மணிமுத்தாற்றில் சில நீர்ப்பெருக்குகள் குதிரை தாவுமாப்போலத் தாவி தாவி ஒடுகின்றன. அந்தப் பெருக்குகளில் கொந்தளிக்கின்ற அலைகள் சாமரைக் கற்றை, சந்தனக்கட்டை முதலியவை களை உந்தித் தளளி வருகின்றன. ஆறுகள் கால்வாய். களாகப் பிரிந்து கழனிகள் பாயும் நிலையில் காட்சிகளை அற்புதமாக விளக்குவர் பெரியாழ்வார். கால்வாய் நீர்களில் இளமை பொருந்திய வாளை மீன்கள் ஆமைகளின் முதுகின் மேல் குதித்துக்கொண்டும், நன்மலர்களை உழக்கிக் கொண்டும் களிப்புடன் விளையாடுகின்றன என்று காட்டுவர். செந்தாமரை மலர்களையுடைய வயல்களில் திரள்திரளாகப் பரவியிருக்கின்றன அன்னப் பறவைகள். அவை ஆழ்வாருக்கு எம்பெருமானின் திருச்சங்கின் வெண்மை நிறத்தை நினைவூட்டுகின்றன.' அடுத்து, ஆழ்வார் காட்டும் சோலைக் காட்சியில் நம் மனம் ஈடுபடுகின்றது. சோலைகளில் வண்டுகள் விளை யாடும் முல்லை, மல்லிகை முதலிய மலர்களின் நிறு: மணத்தை அணவிக்கொண்டு மாருதம் விசுகின்றது என்று காட்டுவர் திருமங்கையாழ்வார். இளவண்டு கள் மணம் மிக்க செண்பக மலரையும் மல்லிகை மலரையும் தழுவிய வண்ணம் நறுமணமுள்ள தேனில் 3. பெரி. திரு. 9. 10:10 6. பெரியாழ். திரு. 4.4:5 4. ഒു. 9, 10: 1 T. ഒു - 4. 4: 4 6. 9. 10: 3 8. பெரி. திரு. 9. 10 : 2