பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் சோமுகாசுரனை வென்று நான்மறைகளையும் மீட்டு அவற்றை நான்முகனிடமே தந்து விடுகின்றான். நான் முகன் பொருட்டு அவசரமாக எழுந்தருளிய காரணத்தால் தேவிமார் இன்றித் தன்னந்தனியாக வந்திருக்கின்றார் போலும். இந்த எம்பெருமானையே பால் பாண்டியன்: என்றும் வழங்கி வருகின்றார்கள். இங்ங்னம் வழங்க வேண்டிய காரணத்தையும் எண்ணுகின்றோம். பண்டு நான்முகன் வழிப்பட்ட வைகுந்தநாதர் பின்னர் சிறிது காலம் எப்படியோ மண்ணுக்குள் மறைந்து விடுகின்றார். அப்படி மறைந்திருக்கும் இடத்தில் அக்கம் பக்கங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்கள் பால் சொரியத் தொடங்குகின்றன. ஆநிரைகளை மேய்க்கும் ஆயர்கள் இச் செய்தியை அரசனிடம் தெரிவிக்கின்றனர். அரசனும் அதிசயத்துடன் அவ்விடம் போந்து ஆட்களை விட்டு மண்ணைத் தோண்டிப் பார்க்கின்றான். மண்ணுக் குள் மறைந்திருந்த வைகுந்தநாதர் காணப்படுகின்றார். அவரை வெளிக் கொணர்ந்து அவர் இருந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபடுகிறான் அரசன். இது காரண மாகவே இன்றும் இவருக்குப் பால் திருமஞ்சனம் நடை பெற்று வருகின்றதாக அறிகின்றோம். பாற்கடலிலேயே அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் பாலபிஷேகம் பெறுவதும், அதனால் பால் பாண்டியன்’ என்று திருநாமம் சூட்டப் பெறுவதும் இயல்புதானே. இந்த வைகுந்தநாதனை நம்மாழ்வார் மட்டிலும் இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த இரண்டு பாசுரங்களும் நேரே இவரை மங்களசாசனம் செய்தவை அல்ல. அண்மையிலுள்ள திருப்புளிங்குடி எம்பெருமானை மங்களாசாசனம் செய்த திருவாய் மொழிப் பதிகத்தில் இந்த இரண்டு பாசுங்களும் வருகின்றன. ஒரு பாசுரத்தில் திருவை குந்தத்துள்ளாய்! தேவா!' என்ற தொடர் மட்டிலுமே வருகின்றது. மற்றொரு 2. திருவாய் 9, 2 : 8