பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21s; பாண்டி நாட்டுத் திருப்பதிகள் கன்னிமூலையில் வைகுந்த வல்லி காச்சியாரும் அதற்கு எதிராக இருக்கும் திசையில் சோரகாத நாச்சியாரும் தனித்தனிக்கோயில் கொண்டு இருப்பதைக் காண்கின் றோம் சோரநாத நாயகியின் சந்நிதியைக் கடந்து வருங் கால் வைகுந்த வாசலைக் (பரமபத வாசல்) காண்கின் றோம். இந்த வாசல் ஆண்டுவோறும் வைகுண்ட ஏகாதசி வன்று ஒரு முறை திறக்கப்படும் என்பதையும் அறிகின் தோம். இந்தத் திருவாசலின் அருகில்தான் மணவாள மாமுனிகளின் சந்நிதி உள்ளது. அந்த ஆசாரிய புருடனைச் சேவித்துவிட்டு மேலும் நடந்தால் சிலை உருவில் தசாவதாரக் காட்சியும், இதற்கு எதிர்த்திசையில் தென்கிழக்கு மூலையில் தனிக்கோயில் கொண்டுள்ள யோகநரசிம்மரின் காட்சியும் நம் கண்ணில் படுகின்றன. இந்த யோகநரசிம்மரின் முன்னிலையில் செப்புச்சிலை உருவில் அழகிய வடிவில் இலக்குமி நரசிம்மர் அமர்ந் திருப்பதையும் காண்கின்றோம். இந்தச் சந்நிதியில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவில் சிறப்பான பூசை தடக்கிறதாகவும் அறிகின்றோம். இவர்களையெல்லாம் சேவித்து விட்டு வெளி வருங் கால் பலிபீடம், கண்ணன் குறடு, இவற்றிற்கு வடபுறம் ஒரு பெரிய மண்டபம் ஆகியவற்றைக் காண்கின்றோம். இந்த மண்டபத்தில்தான் திருவேங்கடமுடையானின் சந்நிதி உள்ளது. இத்திருக்கோயிலின் சிற்பச் சிறப் பெல்லாம் இம் மண்டபத்தில்தான் உள்ளது. இச் சிறப்பை விளக்குவதற்கு ஒரு பாஸ்கரத் தொண்டை மான்தான்' அருகில் இருக்க வேண்டும். நாம் ஓரளவு 10. மாவட்ட ஆட்சியாளராகத் திகழ்ந்து பல நூல் களை எழுதித் தமிழுலகிற்கு அளித்தவர். இவரது வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் வெளியான நான்கு நூல்களும் தமிழ் கூறு நல்லுலகத்தின் பாராட்டு தலைப் பெற்றவை. இவர் இன்று வைகுந்தவாசி.